அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப்பிடித்து கடந்து முன்செல்லும். 'வைரஸ் கதைகள்' எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்துப் பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலகட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண்முன் ஒரு டிஸ்டோபிய உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்காக்கும் கருவியுள்ளது. மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும். இந்த சூழல் எப்பேர்பட்ட அறநெருக்கடிக்கு நம்மை தள்ளியது? தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் முடிவு செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்கு காரணமான சிக்கலைக் காட்டிலும் பூதாகாரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்கக்கூடுமா? எத்தனை கேள்விகள்! நம்மை ஆழ்ந்த சுய பரிசோதனைக்கு இட்டுச் செல்கின்றன இக்கேள்விகள். 'விஷக்கிணறு' அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது. முதன்மையாக, உன்னதங்களை அடைய நாம் கொடுக்கும் விலை என்ன? உண்மையில் அந்த இழப்புகளும் தியாகங்களும் நாம் கற்பித்து வைத்திருக்கும் உன்னதங்களுக்கு நியாயம் செய்பவைதானா? தெரியவில்லை. விடைகளை விட சரியான வினாக்கள் முக்கியம்.
No product review yet. Be the first to review this product.