சில வேளை மொழியை இழந்து வாழ்வதும் பிடித்தமானதாக இருக்கிறது. சமீபமாக சாலைகளில் சிறகுகளோடு பறக்கிறேன். வானத்தில் பாதங்களால் நடக்கிறேன். மனிதர்களும் பறவைகளும் மொழியும் அர்த்தங்களும் தடுமாற இயங்கும் ஒரு உயிரியை தான் படைக்கவில்லையே! கடவுள் குழம்பிப்போகிறார். இது ஏதோ மிகையதார்த்தம் அல்ல. யதார்த்தத்தை பரிசோதித்துப் பார்ப்பதற்கு உதவுகிற கற்பனை. அல்லது, வழக்கமான ஒரு அமைப்பிலிருந்து விலகி வழக்கம் அல்லாத ஒன்றை தொடர்வதற்கான முயற்சி. அல்லது, புதிய ஒன்றைச் சிந்திப்பதற்காக வழமையான ஒரு விசயத்தை விடுவிப்பது என எடுத்துக் கொள்ளலாம். லார்க் பாஸ்கரனுடைய ‘றா’ கவிதைத் தொகுப்பை வாசிக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் சால்வடார் டாலி, ரெனே மாக்ரிட், லியோனோரா கேரிங்டன் போன்றோரின் சர்ரியலிஸ ஓவியங்கள் போல் இருந்தது.
R. கரிகாலன்
No product review yet. Be the first to review this product.