சங்கத்திலிருந்து நவீனத்துவம் வரை கவிதைத் தமிழை நன்கறிந்தவர் ஜெயதேவன், ஆணிவேர்... உச்சிக்களை இரண்டினுமிடையில், கைக்கெட்டும் உயரத்தில் தன் கவிதைகளைக் கனியவிட்டிருப்பது அவரது தெளிந்த வாசிப்பின் பரிட்சார்த்தம் என்றே உணர்கிறேன்.
தாவரம் நீர்மையுமாகப் பிணைந்திருக்கும் இந்தப் பசுமைக்காதல் கவிதைகளில் - காதலில் உடைந்த வளையற்துண்டுகள், காலத்தின் கலை டாஸ்கோப்பில், அவன்/அவள் நினைவுகளை முன்னும் பின்னும் சுழலவிடுகின்றன. கண்ணீரில் நனைத்து கனவுகளில் உலர்த்துகின்றன.
எங்கிருந்து தொடங்குவது உனக்கான எனது கடைசி முத்தத்தை என்று கேட்கிறார். தொடங்கலாம்; எங்கே முடியும் என்பதுதான் ஆகூழ் போகூழ் திருப்பம். இருவர் மௌனத்தில் எவரின் மௌனம் அதிகமோ அவர்களே காதலில் வென்றவர் என்கிறார். தொகுதியை வாசித்து முடிக்கிற தருணம்... கணத்த பனிமூட்டம் போல் மௌனம் நம்மை மூடிக்கொள்கிறது.
- பழநிபாரதி
No product review yet. Be the first to review this product.