கவிஞன் வீட்டுக்குப் புதியபுதிய சொற்களை அனுப்பி வைக்கிறது. அப்படித் தமிழ் அனுப்பும் சொற்கள் புனிதாவுக்கும் நாடோறும் வந்து சேர்கின்றன. ஓயாமல் இயங்குகிறார்; எழுதுகிறார். பின்னோக்கி நகராத நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறார் புனிதஜோதி. கடலின் தாகம் தீர்க்கும் நோக்கத்தோடு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது நதியில்.
- கவிஞர் தமிழன்பன்
கவிதை எழுதுவது புனிதஜோதிக்கு வீடு திரும்புதலாக இருக்கிறது. அனைவரும் தேனீர் தயாரிப்பதாக இருக்கிறது. மனப்பறவையின் சிறகுலாத்தாக இருக்கிறது. அன்பின் ஆளுயுறக் கண்ணாடியில் இவர் சமூகத்தின் பல முகங்களையும் பார்க்கிறார்.
- கவிஞர் பழனிபாரதி
புனைவு வெளியில் சொற்களைப் பறவையெனப் பறக்கவிடுகிறார் புனிதஜோதி. வான்நோக்கி உயரவும் எண்திசைகளில் விரிவாகவும் பறக்கின்றன. எல்லையற்றுப் பறக்கும் அவரின் சொற்கள் வாசிப்போர்க்கு சிறகுகளை வழங்குகின்றன.
- கவிஞர் தமிழ்மணவாளன்
சொற்களை யாருக்கும் தெரியாமல் மஞ்சள் துணியில் கட்டிவைக்க அது என் உடலெங்கும் முளைத்து வனமாகிறது என்ற புனைவை படித்து நாம் மறைத்து வைத்த பழைய சொற்களை நமக்குள் தேட வைக்கிறது. நம் உடல் வனமாகாதா என ஏங்க வைக்கிறது. புனிதஜோதி கவிதை நிலம்.
- கவிஞர் அமிர்தம் சூர்யா
உலகம் முழுவதும் இதழ்கள் வாயிலாகவும் முகநூல் வாயிலாகவும் பரவலாக அறியப்பட்ட கவிஞராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். புதுக்கவிதை ஏற்புடையதல்ல என்ற நவீன புலவர்கள்கூட தன் கவிதைகளைப் பாராட்டுகிற அளவுக்குத் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
- கவிஞர் சொர்ணபாரதி