பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.
முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் மீண்டும் புதிய வாசிப்பொன்றைத் துவக்க உங்களைத் தயார்ப்படுத்தும்.
கைபேசியின் அழைப்பினூடே பரவும் செய்தியொன்று மனிதரைக் கேலிகூத்தாக்கி, அதீதக் கதைக்களமாக மாறி நிச்சயமற்ற உரையாடலொன்றை அது தொடங்கி வைப்பதை இங்கு காணலாம்.