பழந்தமிழ் இலக்கியக் கட்டமைப்பில் உள்ள அகம், புறம் என்ற பிரிவு நிலைபெற்ற காலத்திற்கு முன்போ அல்லது சமகாலத்திலோ எழுதப்பட்ட தேரி காதை அகத்தையும் புறத்தையும் ஒன்றாக்கி தனிவாழ்வின் பொதுவெளிக்கூறுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. பெண்வெளிப்பாட்டு வரலாற்றை அறிவதில் தேரி காதை முன்வைக்கும் அரசியல் பெண்ணியவாதத்தின் அடிப்படை அம்சங்களைக் காட்டுவதாக உள்ளது. புராணிகப் புனைவுகளுக்குள் சீதையின் சோகம், அம்பையின் வஞ்சம், பாஞ்சாலியின் சீற்றம் என்றே மறுவாசிப்புகளைச் செய்து வரும் இந்தியச் சூழலில் தேரி காதை புதியதொரு வெளிச்சத்தைக் காட்டுகிறது. பெண்ணியத்தை இறக்குமதிச் சரக்கென்று விமர்சிக்கும் வாதத்தைத் தகர்ப்பதாகவும் தேரி காதை அமைகிறது.
No product review yet. Be the first to review this product.