நெய்தலின் சமவெளிச் சமூகத் தொடர்பாளரே இந்த தலைச்சுமடுகாரிகள். தியாகத்தின் இலக்கணம் இவர்கள். புறக் கண்களுக்கு அபலையாய்த் தோற்றமளிக்கும் செசீலி, அகக் கண்களுக்கு ஆகப் பெரும் ஆளுமையாய்த் தெரிகிறாள். தன் கணவனுக்காக பொருளாதாரம் அனைத்தையும் இழந்து, அவனையும் இழந்த பின்னும், பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்ற முனைப்பு அவளிடம் இருக்கிறது. பிறந்த இட, புகுந்த இட மாயைகள் அவளது வாழ்வின் அடுத்தகட்ட முடிவைத் தடுக்க முடியவில்லை. அவமானமும், அலட்சியமும் அடி உரம் என்று தெம்மாந்து நிற்கிறாள். சமூகம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய மாற்றுத் தலைமைக்கான குறியீடு இது. வாழ்வாதார நெருக்கடியில், தன் தோளையே ஊன்றுகோலாய்க் கொடுத்துக் காக்கும் மற்றொரு பெண்ணாளுமை பெர்த்தீசியா. மகத்தான மனிதங்கள், ஆளுமைகள் இன்னும் நம்மிடையே உலவியபடியே இருக்கிறார்கள். நமக்குக் காணக் கண் வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
No product review yet. Be the first to review this product.