‘ஞாயிறு கடை உண்டு’ நாவல் சமகாலத் தஞ்சாவூர் நகரத்தைப் பின்புலமாகக் கொண்டது. தஞ்சாவூரின் மையமான கீழவாசல் பகுதி மீன்சந்தையும் அதன் தொழிலாளர்களும், ராவுத்தாபாளையத்தில் தங்கியிருந்து தவணை வியாபாரம் செய்கின்ற குழுவினரும், காந்திஜி சாலை ஜவுளிக்கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களுமாக பாட்டாளிவர்க்கத்தின் பாடுகளை முக்கோணக் கதைகூறல் உத்தியில்,வாசகனை அயர்ச்சியுற வைக்காத மொழியில், அவனை சிந்திக்கத் தூண்டுகிற விதத்தில் எழுத இயன்றது மகிழ்ச்சியளிக்கிறது. குறைவான பக்கங்களில் ஒரு நகரம் குறித்த சித்திரத்தை எழுப்ப முயற்சித்துள்ளேன்.