நவீனக் கவிதைகளின் பாட்டன் எஸ்ரா பவுண்டின் ‘எல்லாவற்றையும் புதுமையாக்கு’ என்ற முழக்க நாதத்துக்கு ஏற்ப கருத்திலும், காட்சியிலும், மொழியிலும் “சதுரமான மூக்கு” என்ற இதிலுள்ள கவிதைகள் தமிழ்க் கவிதைகளின் கருத்தையும் கருவிகளையும் புதுமையாக்க முயல்கின்றன.
நவீனக் கவிதைகளைப் பலரும் வித்தைகாட்டும் கோலாகப் பயன்படுத்தும் நேரத்தில் உணர்ச்சிகளை க்யூபிஸ ஓவியமாய் வெளிச்சத்திற்குத் திறந்து காட்டி கலையின் துல்லியமான அனுமானிகளால் அளந்து பார்க்கிறார். அதற்கு ஏதுவாக இவர் முயன்றுள்ள புதிய கவிதா வடிவங்களும் பரிசோதனைகளும் அவருக்குக் கைக்கொடுக்கின்றன.
-சித்துராஜ் பொன்ராஜ்
No product review yet. Be the first to review this product.