கவிஞர் திராவிடமணி ஓர் சாதாரணப் பெண்ணாக உள்ளும் புறமும் நினுறு உலகைப் பார்க்கும் வழியில் அவரது கவிதைகள், கோடுகளோடும் வண்ணங்களோடும் பயணிக்கிற எம்போன்றவர்களுக்கு பிரவாகிக்கும் படிமவெளி அடுக்குகளோடு கேள்விகளையும் அமைதியையும் அளித்துச் செல்கின்றன. அவை வார்த்தைகளின் வழி நேரடியாகப் பேசும் உருவ அரூபச் சித்திரங்களாக என்முன் நிறைந்திருக்கின்றன. அதுவே படைப்பு நிலையில் திராவிடமணி அவர்களின் வெற்றி எனக் கொள்கிறேன்.
- எம்.டிராட்ஸ்கி மருது