கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க் கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப் பற்றிய அவதானம் இதிலுண்டு. இந்த விரிவில் 6 பெண் கவிஞர்கள், 7 முஸ்லிம் கவிஞர்கள், 3 இந்தியக் கவிஞர்கள், 13 புலம்பெயர் கவிஞர்கள், ஒரு சிங்கப்பூர்க்கவிஞர், அரசியல் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் கவிஞர் ஒருவர், தலித்தியக் கவிஞர், இடதுசாரியக் கவிஞர் எனப் பல்வேறு தரப்பினரின் கவிதைகளைப் பற்றிய பார்வைகளும் உள்ளது. பெண்ணியம், சாதியம், இன ஒடுக்கமுறை, அதற்கான எதிர்க்குரல், முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகள், சிங்களச் சமூகத்தின் உள்நிலைகள், அகதிகள், புலம்பெயரிகளின் நிலை, தங்களின் பூர்வ நிலத்தை இழந்த மக்களின் உணர்வு எனப் பலவோட்டங்களைக் காணலாம்.
No product review yet. Be the first to review this product.