என்னுடைய பதின் பருவத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள், சிறுகதைகளை ஆர்வத்துடன் வாசிக்கத்தொடங்கிய செயல், இன்றைக்கும் தொடர்கிறது. ரஷியன், பிரெஞ்சு உள்ளிட்ட ஐரோப்பிய இலக்கியப் படைப்புகள் எனக்குப் புதிய உலகை அறிமுகம் செய்தன. நாடு, மொழி, இனம் கடந்த நிலையில் சகமனிதர்கள் மீதான நேசமும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதலும் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானவை. குறிப்பாகக் காதலை முன்வைத்துப் பிற மொழிகளில் வெளியான கதைகளைத் தேர்ந்தடுத்துத் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான சிறுகதைகள், எனக்குள் உறைந்துள்ளன. அந்தக் கதைகளை இளம் வாசகர்களும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் 'உலகக் காதல் கதைகள்'.
No product review yet. Be the first to review this product.