சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரம் பட்டப் படிப்பை முடித்து விட்டு அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம், திரைக்கதை எழுதும் துறையில் பயிற்சி பெற்றார்.
கதை, திரைக்கதை எழுதுவதில் இவர் பங்கேற்ற படங்கள்...‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘ஏழாவது மனிதன்’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘ஜீவா’, ‘வெற்றி விழா’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘அஜப் பிரேம் கி கசப் கஹானி’ (இந்தி) இன்னும் சில.
இயக்கிய படங்கள்... ‘நியாயத் தராசு’, ‘இதயத் தாமரை’, ‘அமரன்’, ‘துறைமுகம்’, ‘அதே மனிதன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘இந்திரா விழா’ இன்னும் சில.
திரைக்கதை எழுதுவது பற்றி ‘திரைக்கதை: உருவமும் உள்ளடக்கமும்’ என்ற புத்தகமும், கவிஞர் வைரமுத்துவின் நூற்றுக்கும் மேலான திரைப்படப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.