“நான் சொல்லுவதாலேயே நீங்கள் பௌத்தராக மாற வேண்டிய அவசியமில்லை. எது சரி என்று உங்கள் அறிவின் துணைகொண்டு முடிவு செய்யுங்கள்” என்றுதான் புத்தரே சொல்கிறார். 'உனக்கு நீயே விளக்கு' எனத் தன் இறுதிச் சொல்லாக புத்தர் உரைத்ததும் இதுதான். அம்பேத்கரின் அறிவுரையும் அதுதான். அதனால்தான், ஒரு குழந்தை பௌத்தராக முடியாது என்று வரையறுக்கிறது பௌத்தம். குழந்தை வளர்ந்து விழிப்புணர்வோடு தான் பௌத்தராக உணர்ந்தால் மட்டுமே பௌத்தராக மாற முடியும். பிறப்பால் மட்டுமே ஒருவர் பௌத்த அடையாளத்தைப் பெற முடியாது. இது பௌத்தத்தின் அடிப்படை விதிகளில் ஒன்றாகும். ஆகவே, ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள். எதையும் விழிப்புணர்வோடு இருந்து சிந்தித்து முடிவு செய்யுங்கள். அதுதான் இந்த நூலிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவரின் சிந்தனையைத் தூண்ட உற்ற துணையாக இந்த நூல் பயன்படும் என்பது உறுதி.
கச்சாமி
No product review yet. Be the first to review this product.