நாம் வாழும் காலம், வரலாற்றின் சுழற்சியில், ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியிருக்கிறது. சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் கேலிப் பொருள்களாகிவிட்டன. வசதிகளின் பெருக்கத்தையே வாழ்வின் மேன்மையாகவும் வெற்றியாகவும் கருதும் மனோபாவம் நம்மைப் பீடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிறந்த அம்சத்தை வெளிப்படுத்தாத பட்சத்தில் இந்த உலகம் இதை விடவும் மோசமான கட்டத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டது ஒன்றுதான்: எந்தவொரு காத்திரமான செயலையும் தொடர்ந்து நம்பிக்கையுடன் மேற்கொண்டு வந்தால், அது தன்னளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னேடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான்.
No product review yet. Be the first to review this product.