ஆசிரியர் உரை : விஷ்ணுபுரம் ஒரு காவிய நாவல் தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்து கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்து கொண்ட படைப்பு ஆகவே இதில் எல்லா தரப்புகளும் பேச படுகின்றன வலியுறுத்த படுவது என்று எதுவும் இல்லை அனைத்தும் ஆராய படுகின்றன இது எதை கூறுகிறது என்ற தேடலுடன் எந்த திசைக்கு திரும்பினாலும் தவறான திசைக்கே செல்ல கூடும் விஷ்ணுபுரம் ஒரு கனவு கனவுகள் வசீகரமானவை இந்நூலின் ஈர்ப்புக்கு காரணம் அதுவே. அதே சமயம் கனவினில் முற்றிலும் இனியவை என்று எது வுமே இல்லை. கனவுகள் நம்மை நமக்கு காட்டுபவை நம்மை நிலை குழைய செய்பவை. நாம் நம் தர்க்க புத்தியால் எவ்வுளவு தூரம் சென்றாலும் எவ்வுளுவு சுருக்கி வகைபடுத்தினாலும் அளந்துவிட முடியாதவை.-எஸ்.ராமகிருஷ்ணன்
wikipedia: ஏறத்தாழ 800 பக்கம் கொண்ட நாவல் இது. விஷ்ணுபுரம் என்ற கற்பனைநகரம் இதன் கதைக்களம். அங்கே ஒரு மாபெரும் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறைக்குள் ஒரு மாபெரும் கிடந்த கோலத்திலிருக்கும் சிலை உள்ளது. இது விஷ்ணு சிலையென வைதீர்களும், பெருமூப்பன் சிலையென செம்படவர்களும் நம்புகின்றனர். இச்சிலை யுகத்துக்கு ஒருமுறை புரண்டுபடுக்கும் என்று ஐதீகம் அங்கே உள்ளது. அந்த ஐதீகத்தை குறியீடாக ஆக்கி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நாவல் பின் நவீனத்துவ கூறுகளைக் கொண்டது. கதை நேர்கோடாகச் செல்லாமல் முன்னும்பின்னுமாக ஊசலாடி பல இடங்களை தொட்டுசெல்கிறது. 200க்கும் மேற்பட்ட கதைமாந்தர்களின் வாழ்க்கையும் நூற்றுக்கணக்கான கதைகளும் பின்னி அளிக்கப்பட்டிருக்கின்றன. கைந்தக்கதை ஒரு மிகைபுனைவு ஆகும். யதார்த்தமான நிகழ்ச்சிகளும் அதீத கற்பனைகளும் கலந்தவையாக உள்ளது இது. புராணத்தன்மை கொண்ட நாவல் இது. - wikipedia
http://pichaikaaran.blogspot.com : நாமெல்லாம் உண்மைதானா அல்லது யாரோ ஒருவர் சொல்லி கொண்டு இருக்கும் கதையில் நாமெல்லாம் ஒரு பாத்திரம்தானா .. எல்லாமே ஒரு நாடகம்தானா என்று ஓர் உணர்வு ஏற்பட்டது...
உண்மையில் இந்த உணர்வை ஏற்படுத்துவது அந்த நாவலின் நோக்கம் அல்ல .. ஆனால் எனக்கு ஏற்பட்ட உணர்வு இது... உண்மையல் இதை படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது.... அறிவுரை கூறுவது, ஒரு சிந்தனையை போதிப்பது , ஒரு நபரின் சாகசங்களை சொல்வது என்று எதுவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான நாவலாக இருந்தது விஷ்ணு புரம்.-