ஆணென்கிற அகம்பாவமும் அதிகாரமும் தன்னியல்பாக மாறி அதற்கிசைவாகவே வாழ்ந்துவிட முடியுமென நம்பிக்கிடக்கும் ஒருவருக்கு இவற்றின் ஆயுள், ஒரு பெண் அளிக்கும் மதிப்பைப் பொறுத்ததே என்பதை அறியும் கணத்தில் தன்னளவில் குறியறுத்து கதறும் நிலைக்கு ஆளாகிப்போகிறார். பெற்றோர், தம்பதியர், மகவுகள், நண்பர்கள், உறவினர் என்னும் பொதுப்பெயர்களுக்குள் இணக்கம் காணமுடியாத குணவியல்புகளோடு தத்தமது பாலின அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் எதிர்மைகளின்பொருட்டு சார்புநிலை எடுக்கவியலாமல் தத்தளிக்கும் நம்மை உமேஷ் எழுதிப்பார்த்திருக்கிறார்.
- ஆதவன் தீட்சண்யா