வெண்ணிற இரவுகள் இரவின் ஊடாக அலைவுறும் மனித ஆசைகளையே வெளிப் படுத்துகிறது. கதாபாத்திரங்கள் வழியாக மனதின் இருண்ட கதவுகள் திறக்கப்படுகின்றன. இரவினுள் அடங்க மறுக்கும் பகல்போலதான் காதலும். அது மனிதர்களை நிம்மதியற்று செய்கிறது. ஆனால், அந்த அலைக்கழிப்பும் வலியும் காதலுக்கு அவசியம் என்றே தோன்றுகிறது. வலியில் இருந்தே காதல் வளர்கிறது. பிரிவே காதலை உணரச் செய்கிறது.
அவ்வகையில் எப்போது வாசிக்கையிலும் ‘வெண்ணிற இரவுகள்’ நிராசையின் முடிவில்லாத பாடலை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருக்கின்றன.
- எஸ்.ராமகிருஷ்ணன்