வில்லில் இருந்து புறப்பட்டு வரும் அம்பு தன் இலக்கை அடைய எடுத்துக்கொள்ளும் வேகத்தையே மிஞ்சும் வைக்கோவின் சொல் அம்பு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே! அரசியல்வாதி, இலக்கியவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பன்முக ஆளுமைகள் வைக்கோவிற்கு இருந்தாலும், அவர் தமிழின உணர்வாளர் என்பதே தனித்துவ அடையாளம்.