காட்டின் அடர்ந்த பசுமையும், அதில் வாழ்கின்ற உயிர்களும்தான் நாட்டின் அழியாச் செல்வங்கள். அத்தகைய காட்டையும், காட்டில் வாழ்கிற உயிர்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
செழுமையான காட்டைப் பற்றியும், காட்டிலேயே ஜனித்து வாழும் உயிர்களைப் பற்றியும் பேசுவதுதான் ‘வனங்களில் விநோதங்கள்’.
பூச்சிகளைத் தின்னும் தாவரம் எது? மாநில விலங்கு எது? வனத் தீயை அணைப்பது எப்படி? மதம் கொண்ட யானையைக் கையாள்வது எப்படி?- இப்படி பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் நூலகப் பட்டியலில் இடம்பிடித்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
அபூர்வமான ஓர் உள்ளடக்கம், அலாதியானதொரு மொழிநடையில் சுட்டி விகடனில் தொடராக வெளியானபோதே சுட்டிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இது சுட்டிகளுக்கான புத்தகமாக மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான வனத் தகவல் களஞ்சியமாகவும் திகழும்.
No product review yet. Be the first to review this product.