வையத் தலைமைகோள்
பல நாட்கள் நொண்டியடித்த நிறுவனங்கள் முந்தியடித்து த்டீரென முன்னேறுவதைப் பார்க்கிறோம்” இருளில் கிடந்த சில இல்லங்கள் எதிர்பாராத நேரத்தில் வெளிச்ச விழுதுகளால் எழுந்து நிற்பதைக் காண்கிறோம்” நட்டத்தில் மூழ்கிக் கன்னத்தில் கை வைத்த கடைகள் சட்டென்று பிரகாசிப்பதைக் கண்டு அதிசயிக்கிறோம் ; வறுமையே வாழ்த்திய சில மாநிலங்கள் வீறுகொண்டு பீடு நடை போடுவதைப் பற்றிய படிக்கிறோம் நிமிர்ந்தே இருந்த சில நாடுகள் நிற்க முடியாமல் தடுமாறுவதை உணர்கிறோம் மூடப்பட இருக்கிறது சில வர்க்கங்களை அண்ணாந்து பார்க்கும்படி மின்னி மிளிர்வதை அறிகிறோம்.
இந்த மாற்றங்களை ஏற்படுத்தியது யார் என்று அலசினால், உலக விரல்கள் ஒருவரையே சுட்டும் அந்த ஒருவரே மலர்களை மாலையாக்கிய மனிதன் வழிந்த நீரை வாய்க்காலாக்கிய வினைஞன்; வண்ணங்களை ஓவியமாக்கிய தொழில்நுட்பமாக்கிய கணீஞன்; கண்டுபிடிப்புகளைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்த வித்தகன் கனவை நனவாக்கிய தீர்க்கதரசி. இப்படி முடியாதவற்றை சாத்தியமாக்கிக் காட்டியவர்களை தலைப்புச் செய்தியாக மட்டுமல்லாமல்; தலைமுறைச் செய்தியாக அனைவரும் நினைவில் நிற்உத்திவைத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் மட்டும் எப்படி இந்த மாற்றங்களை ஏற்படுத்தினார்கள்? எந்த ரசாயனத்தால் இவர்கள் ரசவாதம் செய்தார்கள்? எந்தப் பரிமாணத்தால் இந்தப் பரிணாமம் தோன்றியது.