கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தமது பெயரிலேயே,மிக விரும்பி வெளியிட்ட இலக்கிய இதழ் ‘கண்ணதாசன்’.
சென்ற இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தொடங்கி வெளிவந்த அருமையான இலக்கிய இதழ் ‘கண்ணதாசன்’.
மிகச்சிறந்த படைப்பாளர்களின் எழுத்துகளைத் தாங்கி,தமிழ் இலக்கிய உலகின் இணையற்ற மாதப் பத்திரிக்கையாக வலம் வந்த இதழ் கண்ணதாசன்.
இணையாசிரியர் அமரர் திரு.ராம கண்ணப்பன்,ஓவியருக்கஞர் அமுதோன் (அமுதபாரதி) ஆகியோரின் ஒத்திசைவான ரசனையில் வடிவம் பெற்று அனைவராலும் பாராட்டப் பெற்றைதழ் ‘கண்ணதாசன்’.
ஓர் இலக்கிய சகாப்தமாக விளங்கிய கண்ணதாசன் இதழ்களை,அவை வெளிவந்த அந்த நாளின் அமைப்பிலேயே... இதோ ஓவியக் கவிஞர் அமுதோன் கைவண்ணத்தில் மீண்டும் கொணர்வதில் நமது ‘கண்ணதாசன் பதிப்பகம்’ பெருமிதம் கொள்கிறது!