வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும். வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையும் ஏற்படுத்தும் இழிவு.
மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.
பணத்தைச் சேர்ப்பது வேறு. சேமிப்பது வேறு. சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்குச் சொந்தமானவற்றையும் அபகரித்துக்கொள்வது. சேமிப்பது என்பது தன்னுடைய வருமானத்தில் மிச்சம் பிடிப்பது.