”புனைவுக்கு நெருக்கமான மொழியில் நேசமித்ரன் தனது அறிதலின் புலன்கள்வழி உருவாக்கிக் கொண்ட அலகுகளால் பிரதியின் மீது நிகழ்த்திப் பார்த்திருக்கும் உரையாடல்கள் இவை. இக்கட்டுரைகள் எல்லைகள் அழிந்துபட்டு தணிக்கைக்கும் ஆதிக்கத்திற்கும் அப்பால் இயங்கும்கலையின் பல்தள செயல்பாடுகளை, இயல்புக்கும் ,இயல்பெனத் தோன்றும் போலச் செய்தலுக்குமான பாசாங்கின் இடைவெளியைப் பேச முற்படுகின்றன. தொன்மமும் நவீனமும் ஒன்றுள்ஒன்று அருவமாய் மறைந்தாடும் மொழியின் வசீகரத்தை ஏந்தி நிற்கும் சமகாலப் பதிவுகள் வழியே, விளிம்புநிலை இருப்பின் அரசியலை உதிரிகளின் மொழியில் பேச விழைகிறார் ” -கார்த்திகைப் பாண்டியன்