நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷ்மி சரவணகுமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்ஷ்மி சரவணகுமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.