தாழப்பறந்து நீர் கொத்தி தப்பிய மீனைக் குறித்து ஏமாற்றடைந்து ஆகாசம் பறந்து பசியை அடைகாக்கிறது பறவை
மரித்த புன்னகையோடு தக்கையின் அசைவுக்குக் காத்திருக்கும் ஒரு மனிதன்
கூரிய நுனியில் நீரினுள்ளிருந்து அசைவுறும் வலிப்புழு
நிசப்தத்தை விழுங்கி ஆழச்சென்று சேற்றுப் பாசிக்குள் பதுங்கி தன்னிருத்தலைப் பதுக்கும் கரிய மீன்
அஸ்தமனச் சலனத்தில் அலைவுறும் நீர்ப்புலம் நீல வானத்தின் வெறுமையோடு அந்தரங்க இருளை விழுங்கியபடிச் சூழ்கிறது வெளிச்சம்.