கடவுளின் இன்மை தான் நவீன யுகம் பிரதானப்படுத்திய ஒற்றை கோஷம்.கடவுள் இறந்துவிட்டார் என்ற நீட்ஷேவின் புகழ்பெற்ற வாசகத்தை அந்த தத்துவத்துக்கு பின்னாலிருந்த அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகச்சிறந்த திரைப்படங்கள்.
அதுவரை கலைசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழியத் துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.
இரண்டுக்குமிடைப்பட்ட பேர்லஸ் சினிமா எனும் புதிய ரசனை உலகமெங்கும் வரவேற்பைப் பெறத் துவங்கியது.இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள் தான் இதனால் வன்முறையின் மூலம் புதிய அறங்கள் அதிகம் வெளிச்சமிடப்பட்டன.
மேலும் தனி மனித இருப்பு குறித்த கேள்வி?இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல்,ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அம்சங்கள் இந்த யுகத்தை ஆக்கிரமித்திருந்தன..