யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்துகிறது. ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு - எதிர்ப்பு - வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது "துயிலாத ஊழ்" புதிய பண்பாட்டு மரபையும் சேரவே ஆரோக்கியமான விவாதங்களையும் பிரசவித்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இந்த தொகுப்பிலுள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலின் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பானது இலக்கிய உலகில் புதியதொரு பண்பாட்டையும் நம்பமறுக்கும் விசாலமான புதிய கூட்டையும் தோற்றுவித்திருக்கிறது.
No product review yet. Be the first to review this product.