நாம் சமூகம்,மனிதர்கள் சுயமரியாதையோடும்,மனிதத் தனத்தோடும் வாழத் தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை.சக மனிதன் பற்றிய புரிதல்,பரிவு,அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை,முரண்பட்டு வருவதுகூட இல்லை பகைக்கும்-நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் கவலை தருகிறது.சமூகம் என்கிற திரள் உணர்வு குறைந்து விட்டது.
அந்தந்த காலத்தில் என்னைப் பெரிதும் பாதித்த விஷயங்களின் எதிர்வினையே இக்கட்டுரைகள்.இப்போது திரும்பிப் படிக்கையில் எனக்கு மிகவும் திருப்தியாகவே இருக்கிறது.
எழுத்துக்களில் மட்டுமல்ல.எல்லாத் தொழிலுக்கும் அடிப்படைப் பண்பாக இருப்பது ‘அறம்’.என் அளவில் இக் கட்டுரைகள் என் அறம்.