தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம் :
தாமுவுடன் கின்னஸ் அதிகார் மற்றும் குடும்பத்தினர்
கின்னஸ் உலக சாதனைக்காக பிரபல சமையல் நிபுணர் திரு.தாமோதரன் அவர்கள் நிகழ்த்திய சாதனை 2010 ஆம் ஆடு டிசம்பர் 21-ம் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8 மணிக்குத் துவங்கியது. 24 மணி 30 நிமிடம் 12 வினாடிகளில் மொத்தம் 617 சமையல் வகைகளைச் செய்து முடித்தார். செய்த உணவுப் பதார்த்தங்களின் எடை அளவு 199கிலோ.
ஆறு காஸ் அடுப்புகள் மட்டுமே தொடர்ந்து எரிய விடப்பட்டன. மைக்ரோ ஓவன் போன்ற நவீன உபகரணங்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்னும் பல கடுமையான நிபந்தனைகள் இருந்த போதிலும் சிரித்த முகத்துடனும், உற்சாகத்துடனும் சவாலை எதிர்கொண்டு அனைத்து செய்முறைகளையும் சுலபமாகவும், சுவையாகவும் செய்து காட்டி கின்னஸ் குழுவினர் உள்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உலக சாதனையைப் படைத்தார் தாமு அவர்கள்.
இந்த கின்னஸ் உலக சாதனைக்காக திரு.தாமோதரன் அவர்கள் செய்த, சுவை மிகுந்த சமையல் செய்முறைகளை எங்கள் கற்பகம் புத்தகாலயம் மூலம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.