தமிழர் உணவு
காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா.பக்தவத்சல பாரதி ஏற்றுக்கொண்டார். அவரின் ஐந்து ஆண்டுகால உழைப்பு இந்நூல்.
தமிழகச் சமையல் முறைகளுடன் ஈழம், புலம்பெயர் உணவு முறைகளும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.