மண்ணுக்கு கீழே மற்றொன்றும் இருக்கிறது. பண்டைக்கால மனிதகுல நாகரிகம். அவர்கள் பயன்படுத்திய பொருள்கள். பழக்க வழக்கங்களைக் காட்டும் குறியீடுகள். செத்த பிறகும் மனிதர்களைப் பாதுகாப்பதுபோல் புதைக்கப்பட்ட தாழிகள். பழைய கற்காலம், புதிய கற்காலம், நுண்கற்காலம், பெருங்கற்காலம், வர்லாற்றுக் காலம் எனப் பகுத்துப் பார்க்கும் அளவுக்குப் பூமிக்கு உள்ளே புதைந்துகிடக்கும் பொருள்கள், கட்டுமானங்கள்,அவற்றின் வடிவமைப்புகள் என நாம் அறிந்துகொள்ள வேண்டிய அற்புதங்கள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.