விமர்சனம் என்ற ஆகப்பெரிய கலையை நன்குஅர்ந்து,ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி விவாதித்திற்குக் கொண்டுபோகும் இவருடைய விமர்சனங்களால் ஏர்க்கப்பட்ட நான்,மற்ற திரைப்படங்களை நோக்கி இவர் எழுப்பும் கேள்விகளை,விமர்சன ஆய்வை என்னுடைய திரைப்படங்களின் திரையாக்கத்தின் போது அவற்றைக் கவனத்தில் கொண்டே செயல்படுகிறேன்.சமூகத்தின் மீதான அக்கறையும் எளிய மக்களை தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிப்படுத்துவதையும் ஆய்வுக்குட்படுத்தும் இவருடைய விமர்சன நோக்கு இச்சமூகத்திற்கும் எதிர்வரும் திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். -பா.ரஞ்சித்,திரைப்பட இயக்குனர்.