நவீனத்துவத்தின் தோற்றம், வரையறை முதலானவற்றைக் கூறி, அது ஐரோப்பாவிலும் இந்திய தேசியச் சூழல்களிலும் கொண்டாடப்படுவதற்கான காரணங்களைச் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாகப் பேசுகின்றார். அதே நேரத்தில் ஐரோப்பா, இந்தியா, தமிழகம் ஆகிய சமூகப் பகுதிகளில்
நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக் கூறி, அது எவ்வாறு நாவல் இலக்கியப் போக்கினைப் பாதித்திருக்கிறது என்பதையும் முன்வைக்கிறார்.