1946, ஆகஸ்ட் 16ஆம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக்கலவரம்தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமாக இருந்தது. இந்திய வரலாற்றிலேயே அதி பயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்; ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள். நடந்த படுகொலைகளும்கூட, காட்டுமிராண்டித்தனமாக நடந்தன.
இந்தப் படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகைபடிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால், நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சிசு.செல்லப்பாதான். அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக - ஏன், மறைமுகமாகவும்கூட சுதந்திரப்போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை. இதனாலேயே சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ மிகுந்த முக்கியத்துவம் பெருகின்றது.
- சாரு நிவேதிதா
No product review yet. Be the first to review this product.