குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை.அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது.
ஓர் இளவரசன் செய்யும் தவறின் காரணமாக சுண்டைக் காயாக மாறுவதும்,அவன் சொல்லும் மாயாஜாலக் கதைகளும் என இந்நுல் குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு கற்பனை உலகைப் படைத்துக் கொடுக்கிறது.அதே நேரம் வாழ்வில் அவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான அறங்களியும் அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது என்பதே இக்கதையின் சிறப்பு.