ஸ்ரீ பெரும்புதூரில் பிறந்த இராமாநுஜர் வேதாந்தக் கிரந்தங்களைப் பயில வேண்டும் என்றே யாதவப் பிரகாசரிடம் மாணவனாக சேர்ந்தார்.வேதங்களை உரையுடன் விளங்கக் கேட்டறிந்து ஞானத்தை தெளிவு அடைந்தால் ஸ்ரீநாராயண பரத்வத்ய்தை நிலை நாட்டச் சுலபமாகம் என அறிந்து ஆழ்ந்த மதிநுட்பத்துடன் பயிலலானார்.
பெருமாளுடன் தனித்து பேசும் பேறு பெற்ற திருக்கச்சி நம்பிகள் இராமாநுஜரின் புலமைத் திறமையைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். “இராமானுஜரின்!குரு பக்தியில் உம்மை ஒப்பாரை நான் எங்கும் கண்டிலேன்.நீர் இன்று முதற்கொண்டு சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து வரதராஜப் பெருமாளின் திருமஞ்சன நீராட்டுக்குத் தருவீராக!” என்று இராமாநுஜரிடம் கூறினார்.
ஸ்ரீபெரும்புத்தூரில் அவதரித்த இராமாநுஜர் ஜோதி திருவரங்கத்திலே அரங்கனுடன் ஐக்கியமானது.