உலகத் திருமறையாம் திருக்குறளைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.திருவள்ளுவர் சொன்ன வாழ்க்கை நெறிகள்,தத்துவங்களில் பெரும்பாலானவை சாலமோன் மன்னர் சொன்னவை என்பது வியப்பான விஷயம்.சாலமோன் மன்னர் திருவள்ளுவருக்கு ,சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 3000 ஆண்டுகளுக்குப் பின்பும் சாலமோன் மன்னனுடைய நீதி மொழிகள் இன்னும் வியப்பின் சரித்திரக் குறியீடாக நிமிர்ந்து நிற்கிறது.திருவள்ளுவர் கிறிஸ்தவராய் இருந்திருக்கலாம் எனும் ஆய்வுகளின் பின்னணியில் வலுவாக?இயங்குவது ‘சாலமோனின் நீதிமொழிகள்’தான்.
சாலமோனின் நீதி மொழிகளைக் கவிதையாய்ச் சொல்லும் தமிழின் முதல் நூல் இது.தத்துவங்களுக்கு மத அடையாளம் இல்லை,சாலமோனின் தத்துவங்களும் மத அடையாளங்களைத் தாண்டி வாழ்வியல் பாடங்களாக மிளிர்வது தனிச் சிறப்பு!