வரலாறு என்பது ஓர் இருள் காடு. நமக்குத் தெரிந்த ஒவ்வொரு உண்மைச் செய்திக்கும் பின்னால் அறிந்துகொள்ளமுடியாத ஓராயிரம் மர்மங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அந்த மர்மங்களைப் புரிந்துகொள்ள ஒரே வழி, புனைவை நாடுவதுதான். இந்தியா அதிசயங்களின் பூமி என்று சொல்லப்படுவது உண்மையா? கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது ஏன்? உலகால் வெல்லமுடியாத மாவீரரருக்கு இந்தியாவில் நடந்தது என்ன? அவர் இறந்தது ஏன்? எளிய பின்னணியைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பியது எப்படி? அவருக்கு உதவியவர்கள் யார்? ‘விதியின் சிறையில் மாவீரன்’ நாவலைத் தொடர்ந்து வெளிவரும் இந்த இரண்டாவது கதை ருத்ராவின் இரண்டாவது அவதாரமாக விரிவடைகிறது. தனது அசாதாரணமான துப்பறியும் திறனால் பெருமைமிகு பாரதப் பண்பாட்டின் அடியாழத்திலுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டறிந்து வெளிப்படுத்துகிறான் ருத்ரா. சரித்திர நாவல் உங்களுக்குப் பிடிக்குமென்றால் இந்த அபூர்வமான கதை உங்களுக்குதான்.
No product review yet. Be the first to review this product.