ஷாஜி எழுதும்போது அவ்விசையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன.சிறு வயதிலிருந்தே அவதானித்து கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது,அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன.எளிமையானதும் கவித்துவமானதுமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இசை வாழ்க்கைச் சித்திரங்கள் சிறுகதைகளைவிட சுவாரசியமாக படித்துச் செல்லக் கூடியவை.தமிழ்,இந்திய,உலக வெகுஜன இசையைப் பற்றி இத்தகைய கட்டுரைகள் இதற்கு முன்பு தமிழில் எழுதப்பட்டதில்லை.இசை விரும்பிகள் அனைவரும் படித்து,பேணிக் காக்கவேண்டிய இந்நூல் நவீன தமிழ் எழுத்தின் முக்கிய ஆக்கங்களில் ஒன்று.