சம்பத் கதைகள் தொகுதி – 2
சம்பத்தின் முதல் தொகுதியில் அவர் அபூர்வமாக எழுதிய குறுநாவல்கள் சில இடம் பெற்றன். இரண்டாவது தொகுதியில் இடைவெளி என்ற நீண்ட கதையும் இன்னும் சில கதைகளும் இடம் பெறுகின்றன. இக் கதைகள் எல்லாம் பல சிற்றேடுகளிலிருந்து எடுத்துத் தொகுக்கப்படுகின்றன. அவர் எழுத்துகளில் பெரும்பாலும் பிரவு, மரணம் குறித்த விஜாரணை, வாழ்வு குறித்த கேள்விக்குறி என்றெல்லாம் தொக்கி நிற்கின்றன. அவருடைய நீண்ட நாவலான இடைவெளி வெளிவந்தபோது அவர் உயிருடன் இல்லை என்பது அவர் வாழ்வின் முரண். அவர் கதைகளில் புதைந்துள்ள துயரம்.