தமிழின் உன்னத காவியம் கம்பராமாயணம்.வெறும் காவியச் சுவையை நுகர்வதற்காக மட்டுமே படைக்கப்பட்ட நூல் அல்ல அது.
பாத்திரப் படைப்புகளை மிக நுணுக்கமாகவும் உளவியல் தன்மையறிந்தும் செதுக்கி உலவவிட்டு நம் வாழ்க்கையை நாம் செப்பனிடுவதற்கு வழிகாட்டியிருக்கிறான் கம்பன்.
கம்பன் உருவாக்கிய அந்தக் கதை மாந்தர்களின் நுண்ணர்வுகளை நமக்கு எடுத்துக் காட்டி இராமாயணத்தின் முழுப் பரிமாணத்தை,அதன் இரகசியத்தைத் தெளிவாக்கும் முயற்சியின் வெளிப்பாடாக உருவானதுதான் இந்நூல்.
இந்நூலில் திரு.தமிழருவி மணியன் அவர்களின் தேர்ந்த தமிழ் நடையும்,தெளிந்த பார்வையும் நம்மை,இராமாயணத்தைப் புதிய கோணத்தில் படித்துப் புது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு ஆற்றுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.