இந்நாவல், ஜகதா எனும் பிராமணப் பெண்மணி மாமியாராக, தாயாக, மருமகளாக, மனைவியாக, மகளாக தன் குடும்பத்துள் எப்படி வளைய வருகிறார் என்பதை மூன்றாம் நபரின் பார்வையிலிருந்து, கிட்டத்தட்ட அவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை, முன்னும் பின்னுமாய் (NonLinear) எழுதப்பட்டிருக்கிறது. எழுதப்பட்ட காலம் ஏறத்தாழ 52 ஆண்டுகட்கு முன்பு என்பதால் அக்காலத்து பேச்சு, கலாச்சார வழக்கை ஒட்டி அமைந்திருக்கிறது.
இந்நாவலை படித்தோம் என்பதை விட உணர்வுரீதியாக ஒரு குடும்பத்தின் சுக துக்கங்களை நேரிலேயே பார்த்து சென்றோம் என்றே சொல்லவேண்டும். நடைமுறை வாழ்வியலை வெகு எளிதாயும், அதே நேரத்தில் தத்துவார்த்தமாய் அநாயசமாக சொல்லிச் செல்கிறது, இந்நாவல்.