ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டுசென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது.
ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட அம்மா, மகளான யங் சாங் ஆகிய ஒரே குடும்பத்தில் தோன்றிய மூன்று தலைமுறைப் பெண்மணிகளின் மூலமாக, இந்நூலாசிரியர் யங் சாங் இருபதாம் நூற்றாண்டு சீன வரலாற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் ஓர் ஒப்பற்ற படைப்பு இது. இந்நூலின் கதை நகர்ந்த விதம் மறக்கமுடியாத ஒன்றாக மனதில் பதிந்துவிட்டது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஓர் அபூர்வக் காப்பியமாகவே காணப்படுகிறது.
No product review yet. Be the first to review this product.