வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.
தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவியலாக விரிகிறது இது.
சாதிப்பெருமை பேசும் தமிழ்ச் சமூகத்தில் சாதிப்பெயரைச் சொல்லிச் சொல்லியே பொதுவாழ்வின் மையத்திலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பூர்வகுடிகளின் எழுச்சியைப் பேசும் இந்நூல், உண்மைகளைத் தேடச் செய்கிறது. பொதுவாசகரின்
புரிந்துணர்வைக் கோருகிறது.
பல்லாண்டுகால உழைப்பில் இந்நூலை உருவாக்கி இருக்கும் இரா. சுந்தரவந்தியத்தேவன் உசிலம்பட்டியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.