பின்நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமுடி
”....அமைப்பே கூடாது; அது அதிகாரத்துவ முறை என்றெல்லாம் பேசியவர்களுக்குப் பின்னாலிருந்து ஆளும்வர்க்கங்களுக்கான இத்தனை அமைப்புகள் முளைத்திருக்கின்றன. ஆயுதப்போராட்டம் தவறானது என்றவர்களுக்குப் பின்னாலிருந்து முளைத்தவர்கள் சாதியாதிக்க அடையாள அரசியலுக்கான ஆயுதம் ஏந்துகிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணமாக பின்நவீனத்துவம் என்ற பேரில் ஒரு குழு யோனி மையவாத எதிப்பு, குடி கலாச்சாரம் என சீர்குலைவு அரசியலைப் பேசியும், செயல்பட்டும் கொண்டிருந்தது என்பதை அப்படியே புறக்கணிக்கப்பட வேண்டியதா என்ன?
இந்த அரசியல் எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது? இதனால் பலனடைகிறவர்கள் யார்? என்பதையெல்லாம் கண்டறியச் செய்யப்பட்ட சிறிய முயற்சிதான் இக்கட்டுரைகள். இப்பணியில் இந்நூல் முதலும் அல்ல, இறுதியும் அல்ல....”