மதுரை நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்டபோது (1981-1989) ஏற்பட்ட தூண்டுதல்,புதுவைப்பல்கலைக்கழக நாடகத் துறையில் பணியாற்றிய காலத்தில் (1989-1997) முழுமையடைந்தது.அங்கு பயின்ற மாணவர்களின் தேவைக்காக நாடகங்களை உருவாக்கத் தொடங்கினேன்.கதைகளிலிருந்து-கவிதைகளிலிருந்து-மொழி பெயர்ப்பாக தழுவலாக எனக் குறுநாடகங்களையும்,பெருநாடகங்களையும் உருவாக்கித்தந்தேன்.
மேடைக்கான நாடக எழுத்தென்பது ஒருவிதத்தில் உருவாக்குவது தான்.அதன் தொடர்ச்சியாக நவீனத்துவத்தர்க்கம் இடம்பெறும் நாடக் எழுத்தாளனாகவும் விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.நாடகங்களைப் பற்றி தொடர்ச்சியாகத் திரைப்படங்கள்,ஊடகங்கள் ஆகியவற்றை வெகுமக்கள் மனநிலையிலிருந்து விமரிசிக்கும் ஒரு கலையியல் அணுகுமுறை எனக்குள் உருவாகியிருக்கிறது.அந்தப் பார்வைக்கோணமே நாடக எழுத்து என்ற வடிவத்தில் பாத்திரங்களாக மாறிமாறிப் பேசுவதில் உற்சாகத்தையும் களிப்புமனநிலையையும் உண்டாக்குகிறது.அந்தக் கைப்புநிலையை நாடகவாசகர்கள் உணர்வார்கள்.நாடக இயக்குநர்கள் இன்னும் கூடுதலாக உணர்வார்கள்.