மனிதர்களின் வேர்ப்பற்றைச் சொல்லும் நாவல் என்று ‘பதேர் பாஞ்சாலி’ யைக் குறிப்பிடலாம்.அது அந்தக் காலத்தின் குணத்தைச் சேர்ந்தது என்றும் வகைப் படுத்திவிடவும் முடியும்.இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் என்று குறுகுறுக்கும் இன்றைய மனநிலையில் நாவலை அதன் பழைமையை மீறி சமகாலத்தன்மை கொண்டதாகவும் காணமுடியும்.இன்னும் அழுத்தமாகச் சொன்னால் சுழலியல் படைப்புகளுக்கு முன்னோடி என்று வகைப்படுத்துவதும் பொருந்தும்.