எனது பள்ளிநாட்களில் தினமும் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த பிரேயரின் போது யாராவது ஒருவர் அன்றைய செய்தித்தாளின் முக்கிய செய்திகளை தொகுத்து வாசிக்க செய்வார்கள், நான் அதில் விருப்பமாக ஈடுபடுவேன்,
எங்கள் வீட்டில் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் வாங்குவார்கள் என்பதால் நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கம் எளிதாக சாத்தியமானது.
இன்று பள்ளி மாணவர்கள் பலருக்கும் நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கமில்லை, செய்திகளை இணையத்திலோ, தொலைக்காட்சியிலோ கூட அறிந்து கொள்ள விரும்புவதில்லை, ஆனால் செய்திகளை அறிந்து கொள்ளாமல் உலகை புரிந்து கொள்ள முடியாது. ஆகவே நியூஸ் பேப்பர் படிக்கிற விஷயத்தை முதன்மைபடுத்தி இக்கதையை உருவாக்கியுள்ளேன்,
- எஸ்.ராமகிருஷ்ணன்