பாம்பாட்டி தேசம்
கால்நூற்றாண்டு காலமாக கவிதை, புனைவு, விமர்சனம், என இலக்கிய வெளியில் இயங்கிவரும் கரிகாலனின் எட்டாவது தொகுப்பு.
சமகால வாழ்வின் அபத்தங்களை, விசித்திரங்களை எதிர் அழகியல் கூடி அங்கத தொனியுடன் கவிதையாக்குவது கரிகாலனின் தனித்தன்மை. இத்தன்மை இத்தொகுப்பிலும் செயல்பட்டிருக்கிறது.சமூக உணர்வுடன் கூடிய கவிதைகள் கவித்துவ அமைதியோடு வெளிப்படும் சாத்தியப்பாடு மீண்டுமொருமுறை மெய்ப்பட்டிருக்கிறது. மொழியில் புதுமை, வடிவில் எளிமை, வெளிப்பாட்டில் ஒழுங்கு, உள்ளடக்கத்தில் வலிமை என இயைந்து வாசிப்பை நவீனப்படுத்துவதாக இக்கவிதைப் பிரதி திகழ்கிறது. காலமாற்றத்தினூடாக இளமை, மலர்ச்சி துலங்க கவிபாடும் கரிகாலனின் ஆற்றலை இத்தொகுப்பின் வழியாக கண்டுணர முடியும்.
---- இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்.